மேடம் – நீங்கள் நினைத்ததை நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். மகிழ்ச்சியான நாள்.
இடபம் – புதிய சொத்துகள் வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். நிதிநிலை உயரும். குடும்பத்தினர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பிள்ளைகளால் பெருமிதம் அடைவீர்கள்.
மிதுனம் – தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். அதன் முயற்சியும் பலிக்கும். உங்களுக்கு முன்னோரின் ஆசி இன்று உண்டு. தடைபட்ட செயலை நிறைவேற்றுவீர்.
கடகம் – துணிச்சலுடன் செயல்பட்டுவீர்கள். அதனால் நன்மை ஏற்படும். பொதுச் செயலில் ஈடுபடுவீர்கள். மற்றவர்கள் பாராட்டுவார்கள்.
சிம்மம் – கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையை சரி செய்வீர்கள். கூடுதல் வருமானத்திற்கு முயற்சிப்பீர்கள்.
கன்னி – வருமானத்தை அதிகரிப்பதற்கான முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் எண்ணம் பூர்த்தியாகும். நீங்கள் ஈடுபடும் செயலில் முன்னேற்றம் காணும் நாள்.
துலாம் – வெளியூர் பயணத்தால் அலைச்சல் ஏற்படும். முயற்சி தாமதமாகும். விரும்பிய செயல்களில் தடை ஏற்படும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.
விருச்சிகம் – புதிய முயற்சி இன்று வேண்டாம்.மாலையில் மவுனத்தால் நிம்மதி உண்டு.
வேலை தேடியவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வந்து சேரும் நாள்.
தனுசு – தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த பணம் வந்து சேரும் நாள். முயற்சி பலிக்கும்.
கவனமாக செயல்பட வேண்டிய நாள். வழக்கமான வருமானம் தடையின்றி வரும்.
மகரம் – நேற்று இழுபறியாக இருந்து வந்த செயல் இன்று நிறைவேறும். எந்த ஒன்றிலும் பலமுறை யோசித்து செயல்படுவது உங்களுக்கு நன்மை தரும்.
கும்பம் – புதிய முயற்சி இன்று வேண்டாம். வழக்கமான செயலில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களில் விழிப்புணர்வு தேவை. உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும்.
மீனம் – மனதில் உற்சாகம் அதிகரிக்கும். நீங்கள் விரும்பியதை இன்று அடைவீர்கள். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். உறவினர்களிடம் செல்வாக்கு அதிகரிக்கும்.
