வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் கடற்பரப்பில் கரையொதுங்கிய அகதிகள் படகு மீட்கப்பட்டு காங்கேசன்துறை கடற்படைத் தளத்திற்கு இழுத்துச் செல்லப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று மாலை கடற்தொழிலுக்குச் சென்ற மீனவர்களால் குறித்த படகு அவதானிக்கப்பட்ட நிலையில் கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இந்நிலையில், கடற்படையினரின் படகுகளும், மீனவர்களின் படகுளில் சென்று குறித்த அகதிகள் படகினை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்படகில் இருந்த அகதிகளிடம் பெறப்பட்ட தகவல்களில் ஒன்றுக்கொன்று முரண்பாடான தகவல்களை வழங்கியுள்ளனர்.
தாம் மாலை தீவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்தனர். தாம் அவுஸ்ரேலியாவிற்குச் செல்வதாகவும், மலேசியாவிற்கு செல்வதாகவும், சிலர் இலங்கைக்கு வந்ததாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில், படகில் இருந்த அகதிகள் மியன்மார் ரோஹிங்கியா முஸ்லிம்கள் என்பது தெரியவந்துள்ளது. காப்பாற்றப்பட்ட அகதிகள் காங்கேசன்துறை கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
