ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் நடத்தி வரும் வடக்கின் சமரின் குழுநிலைப் போட்டிகள் நேற்று (17) சனிக்கிழமை உரும்பிராய் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றன.
முதலாவது போட்டியில், வடமராட்சி யங்லயன்ஸ் வி.கழகத்தை எதிர்த்து மோதிய வதிரி டையமன்ஸ் அணி 3: 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில், யாழ்.மாவட்டத்தின் உதைபந்தாட்ட வல்லரசுகளான பாடுமீன் அணியைத் எதிர்த்து சென்மேரிஸ் களமாடியது.
விறுவிறுப்பாக இடம்பெற்ற ஆட்டத்தில் சென்மேரிஸ் 3:1 என்ற கோல் கணக்கில் பாடுமீன் விளையாட்டுக் கழகத்தை வெற்றிக்கொண்டது.
வடக்கின் சமரின் இன்றைய முதலாவது போட்டியில் ஆனைக்கோட்டை யூனியன் வி.கழகத்தை எதிர்த்து குப்பிளான் குறிஞ்சிக்குமரன் வி.கழகழ் மோதவுள்ளது.
இரண்டாவது போட்டியில் முல்லைத்தீவு சென்.றோக்ஸ் வி.கழகத்தை எதிர்த்து நாவந்துறை சென்.நீக்கிலஸ் வி.கழகம் மோதவுளளது.
வடக்கின் சமர் தொடருக்கு தமிழ் ஒளி ஊடக அணுசரணை வழங்கிவருகின்றது.
