யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனார்ட் ஞானப்பிரகாசம் ஆண்டகையை இலங்கைக்கான வெளிநாட்டு தூதுவர் குழு சந்தித்துக் கலந்துரையாடியது. யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் இன்று (18) இச் சந்திப்பு இடம்பெற்றது.
பிரான்ஸ், பஹ்ரைன், வியட்நாம், ஜேர்மனி, லெபனான், இஸ்ரேல், எதியோப்பியா, பிலிப்பைன்ஸ், ஜோர்தான், ஆஸ்திரேலியா, ஜக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகிய 12 நாடுகளுக்குப் புதிதாக இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட தூதுவர் குழுவே இந்தச் சந்திப்பில் ஈடுபட்டது.
