ஏரியில் நீராடிய பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று (17) பதிவாகியது.
வீரவில ஏரியில் நீராடிய ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் பதுளை தெமட்டவெல்ஹின்ன பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
