தனக்கும் தனது குடும்பத்துக்கும் தொல்லை கொடுப்பதாக மூன்றாம் தரத்தில் கற்கும் மகன் மீது தாய் ஒருவரால் பொலிஸ் அவசர பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள விசித்திர சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தம்புள்ளை பிரதேசத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த வீட்டுக்கு பொலிஸார் சென்றுள்ளனர். வீட்டில் இருந்த பெண்ணிடம் முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்க்கொண்டனர்.
“இப்போது ரொம்ப லேட் ஆகுது, குழந்தை உறங்குகிறது என குறித்த பெண் பதில் அளித்துள்ளார். எனினும், முறைப்பாடு குறித்து தாயாரிடம் பொலிஸார் தொடர்ந்து விசாரித்தனர்.
தனது குழந்தை மூன்றாம் ஆண்டு படித்து வருவதாகவும், இரவு சீக்கிரம் தூங்கச் செல்லுமாறு கூறியும், தூங்காமல் பல்வேறு செயல்களில் ஈடுபடுவதாகவும், மற்ற குழந்தைகளை தூங்க விடாமல் குழப்படி செய்வதாகவும், குழந்தையை பயமுறுத்துவதற்காக பொலிஸில் முறைப்பாடு செய்ததாக அப்பெண் பதிலளித்துள்ளார்.
குழந்தை இரவு எத்தனை மணிக்கு தூங்க வேண்டும் என்று பொலிஸார் கேட்டபோது, மாலை சுமார் 6:30 மணிக்கு குழந்தைகள் தூங்க வேண்டும் என தாய் கூறியுள்ளார்.
இவ்வாறான சிறு சிறு சம்பவங்கலால் பொலிஸாரின் நேரமும் பொதுமக்களின் பணமும் வீண் விரயமாகிறது என தாயாரை கடுமையாக எச்சரித்த பொலிஸார், இனிமேல் இவ்வாறான செயல்களைச் செய்ய வேண்டாம் என எச்சரித்து விட்டுச் சென்றுள்ள சுவாரஸ்சியமான சம்பவம் பதிவாகியுள்ளது.
