ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் – களபூமி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 3 1/2 பவுண் தங்கநகைகள் மற்றும் 25 ஆயிரம் ரூபா பணம் என்பன இன்று (19) திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வீட்டில் தனியாக வசித்துவந்து 72 வயது மூதாட்டி சமுர்த்திக் கொடுப்பனவை பெறுவதற்காக பிரதேச செயலகத்திற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், வீட்டிற்கு சென்ற திருடர்கள் கதவினை உடைத்து அலுமாரிக்குள் இருந்த திறப்பினை எடுத்து கதவினை திறந்து நகைகளையும் பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
