வடமராட்சி கிழக்கு கடலில் தத்தளித்த படகிலிருந்து மீட்கப்பட்ட அகதிகள் தம்மை பாதுகாப்பான வேறு நாட்டுக்கு அனுப்பி வையுங்கள். மியன்மாருக்கு அனுப்ப வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
“மியன்மாரில் வாழ முடியாமல் மலேசியா நோக்கி தாம் பயணித்தனர் என்றும், தமது பாதுகாப்பான வாழ்க்கைக்கு உதவுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என 104 ரொஹிங்கிய அகதிகள் தஞ்சம் கோரி புறப்பட்ட நிலையில் படகு பழுதடைந்து, வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் தத்தளித்தனர். இவர்களை மீட்ட கடற்படை நேற்று காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்து சென்று கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
