மேடம் – இரண்டு நாள் முயற்சி ஒன்று நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவீர்கள்.
இடபம் – சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை உங்கள் விருப்பப்படி இன்று முடிவிற்கு வரும். குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். மகிழ்ச்சியான நாள்.
மிதுனம் – எதிர்பார்த்த பணம் வந்து சேரும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட சிக்கல் தீரும். பணியாளர்களின் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். வருமானம் அதிகரிக்கும்.
கடகம் – உங்கள் செயல்களில் சில தடை ஏற்படும். சட்ட சிக்கல்களை சந்திக்க வேண்டி வரும். குருவின் அருளால் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். ஒரு செயலில் போராடி வெல்வீர்கள்.
சிம்மம் – துணிச்சலுடன் செயல்பட்டு உங்கள் செயலில் லாபம் காண்பீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும்.
மற்றவரின் விமர்சனங்களை ஒதுக்கி வைப்பீர்கள். நேற்று நினைத்ததை இன்று செயல்படுத்துவீர்கள்.
கன்னி – திருமணத்திற்கு வரன் தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.
வங்கியில் கேட்டிருந்த லோன் பற்றிய நல்ல தகவல் வந்து சேரும்.
துலாம் – உங்கள் கவனக்குறைவால் ஒரு முயற்சி நிறைவேறாமல் போகும். நிதானம் தேவை. செயல்களில் தடுமாற்றம் அடைவீர்கள். எதிர்பார்த்த ஒன்றில் தாமதம் ஏற்படும்.
விருச்சிகம் – வரவுகள் அதிகரிக்கும் என்றாலும் திடீர் செலவுகளால் சங்கடம் உண்டாகும். உழைப்பின் வழியே உங்கள் செயல்களில் சாதகமான நிலை ஏற்படும்.
தனுசு – எதிர்பார்த்த பணம் வரும். பழைய கடன்களை அடைப்பீர்கள். நிதிநிலை உயரும். தொழிலை விரிவு செய்வீர்கள். உங்கள் முயற்சிக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
மகரம் – வேலைக்காக முயற்சி செய்து வந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல தகவல் வரும்.
தொழிலை விரிவு செய்வதற்காக எதிர்பார்த்த பணம் உங்கள் கைக்கு வந்து சேரும்.
கும்பம் – புதிய முயற்சி ஒன்று நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை ஏற்படும்.
செயல்களில் சிரமம் ஏற்பட்டாலும் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வரவு அதிகரிக்கும்.
மீனம் – புதிய முயற்சி இன்று வேண்டாம். செயல்கள் தாமதமாகும். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வழக்கமான பணிகளில் கவனமுடன் செயல்படுங்கள்.
