உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து ஆராய்வதற்காக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு நாளை செவ்வாய்க்கிழமை கூடி கலைந்துரையாடவுள்ளது.
இதன்போது தேர்தலுக்கான திகதி மற்றும் வேட்புமனுக்களை ஏற்கும் திகதிகள் குறித்து கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என அறியமுடிகின்றது.
அத்துடன், ஏற்கனவே சான்றளிக்கப்பட்ட 2022ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவேட்டின் அடிப்படையில் 2023 உள்ளூராட்சித் தேர்தலை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
