மிருசுவில் படுகொலையின் 22ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (20) அனுஷ்டிக்கப்பட்டது.
இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 8 தமிழ் மக்களின் நினைவாகவும் ஈகைச் சுடரேற்றப்பட்டு மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில், தென்மராட்சி பிரதேசசபை தவிசாளர் க.வாமதேவன், தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
