பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் ராஜன்பூர் மாவட்டத்தில் கடும் மூடுபனிகாரணமாக எதிர் எதிர் திசையில் இருந்து வந்த பஸ் ஒன்றொடொன்று மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 23 பேர் காயமடைந்தனர். ஒரு பஸ் பெஷாவரில் இருந்து கராச்சிக்கும், மற்றொரு பஸ் ராஜன்பூருக்குச் சென்று கொண்டிருந்தது.
விபத்தில் காயடைந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட பலர் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
