கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு ஐம்பது லட்சம் பெறுமதி மிக்க பஸ் ஒன்று இன்று (20) அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு எதிர்கட்சித் தலவைரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸவினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், ஐக்கிய மக்கள்சக்தியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திரா பிரகாஷ், கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் டாக்டர் விஜயராஜன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
