மயிலிட்டி கடற்பரப்பில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் படகு கவிழ்ந்த நிலையில், காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலாலி – அந்தோணிப்புரம் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவரே காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
படகு கவிழ்ந்த நிலையில், கரைக்கு அடித்து இழுத்து வரப்பட்டுள்ளது. இந்நிலையில் காணாமல் போன மீனவரை தேடும் பணிகள் முன்னெடுத்து வரப்படுகின்றன.
