வடமராட்சி கிழக்கு கடலில் 104 ரொஹிங்கிய அகதிகளுடன் தத்தளித்த படகிலிருந்து மீட்கப்பட்ட 104 ரொஹிங்கியர்களும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த அகதிகள் இரு பேருந்துகளில் ஏற்றப்பட்டு நேற்றிரவு 8 மணியளவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டே அங்கு அடைக்கப்பட்டுள்ளனர்.
மியன்மாரை சேர்ந்த சிறுபான்மையினரான இந்த ரொஹிங்கிய முஸ்லிம் அகதிகள் பங்களாதேஷில் அடைக்கலம் புகுந்திருந்தனர். அங்கிருந்து இந்தோனேசியாவுக்கு அவர்கள் படகு மூலம் சென்றனர்.
ஆனால், திசை மாறிப் பயணித்த அவர்களின் படகு பழுதடைந்து தத்தளித்த நிலையில், கடந்த 17ஆம் திகதி வடமராட்சி கிழக்கு பகுதியில் வைத்து கடற்படையினரால் அவர்கள் மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
