நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக திருகோணமலை மூதூர் – கட்டைபறிச்சான் இராழ் பாலத்தை ஊடறுத்து வெள்ளநீர் அதிகமாக செல்வதால் போக்குவரத்து மேற்கொள்வதில் மக்கள் பெரும் இன்னல்களை எதிர்கொள்வதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக பாடசாலை மாணவர்கள், முதியவர்கள், சிறுவர்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்பாலத்தின் ஊடாக கணேசபுரம், அம்மன்நகர், பள்ளிக்குடியிருப்பு, தோப்பூர் உள்ளிட்ட 10 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மூதூருக்கு சென்றுவருகின்றனர்.
இப்பாலத்தை புனரமைத்துத்தருமாறு அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப் படவில்லையென மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
