நாட்டின் மாணவர் எண்ணிக்கையில் 70 சதவீதத்தினரின் சீருடை தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 500 கோடி ரூபாய் பெறுமதியான சீருடைகளை சீனா அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
இந்த நன்கொடையின் முதலாவது தொகுதியாக 3 மில்லியன் மீற்றர் சீருடை துணிகள் 38 ஆயிரம் பெட்டிகளில் பொதியிடப்பட்டு , 20 கொல்கலன்களில் இலங்கைக்கு வருகின்றன என்று கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை ஆரம்பிப்பதற்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை விநியோகிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.
