யாழ்ப்பாணம் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் ஒன்று இன்று (21) முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தின் போது அதிகாரியொருவர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை மிரட்டும் தொனியில் பேசியுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
சேவை செய்கின்ற இடத்தில் ஆட்களை வர சொல்லியுள்ளோம். உங்களுக்கு சேவை விருப்பம் எனின் சத்தம் போடாமல் இந்த சேவையினை முடித்து விட்டு போகலாம். இல்லையேல் இந்த போராட்டத்தை வெளியில் சென்று செய்துகொள்ளலாம்.
இதற்குள் வந்து எந்த சத்தமும், சேட்டையும் செய்யக் கூடாது. ஆர்ப்பாட்டம் செய்ய போவதாக இருந்தால் வெளியில் சென்று செய்துகொள்ளுங்கள்.
இங்கே இடம்பெறுகின்ற வேலையினை நிறுத்துவதாக கூறினால், எங்கள் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக கூறி உங்களை கைது செய்ய முடியும் என கடும் தொனியில் பேசியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
