யாழ்.பல்கலைக்கழகத்தில் கடந்த ஒக்ரோபர் மாதத்திலிருந்து இதுவரையான காலப் பகுதியில் பகிடிவதையில் ஈடுபட்ட 16 மாணவர்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.
முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிகபீடம், விஞ்ஞானபீடம் ஆகியவற்றில் தலா 4 மாணவர்களுக்கு ஆரம்பகட்ட விசாரணைகள் முடிவடையும் வரை பல்கலைக்கழகத்தின் அனைத்துச் செயற்பாடுகளிலும் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதுடன் விடுதிகளிலிருந்து வெளியேறுமாறும் பணிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் விஞ்ஞானபீடத்தைச் சேர்ந்த 2 மாணவர்களுக்கும், பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 6 மாணவர்களுக்கும் விடுதிகளில் தங்கியிருப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருப்பதுடன் உடனடியாக விடுதியிலிருந்தும் அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
