நாடு முழுவதும் வடக்கு, கிழக்கு பருவ பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகிறது.
வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மேலும் பல இடங்களிலும் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.
வடக்கு, கிழக்கு மற்றும் மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லி மீட்டருக்கும் அதிகமாக ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
