கைகள் மற்றும் வாய் பகுதிகள் துணியால் கட்டப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பாணந்துறை – இரத்தினபுரி வீதியில் கடகரெல்ல பாலத்துக்கு அருகில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
48 வயதுடைய மினுவாங்கொட கல்லொழுவை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
