மேடம் – நீங்கள் ஈடுபடும் செயல்களில் இழுபறி நிலை உண்டாகும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். புதிய முயற்சி இன்று வேண்டாம். எதிர்பார்ப்பில் ஏமாற்றம் வரலாம். விழிப்புடன் இருக்கவும்.
இடபம் – எதிர்பார்ப்புகள் எளிதாக நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். விரும்பிய வகையில் செயல்படுவீர்கள். நண்பர்களால் நன்மைகள் அதிகரிக்கும்.
மிதுனம் – மறைமுக எதிரிகள் விலகுவர். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களை மாற்றுவீர்கள். வருமானத்தில் தடை அகலும். நிதிநிலை உயரும்.
கடகம் – குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். புதிய முயற்சி அனுகூலமாகும். விலகிச்சென்ற உறவுகள் இல்லம் தேடி வருவார்கள்.
சிம்மம் – விருப்பமான ஒருவரை இன்று சந்திப்பீர்கள். நினைத்ததை சாதிப்பீர்கள். வியாபாரத்தில் நுணுக்கங்களை தெரிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். ஆதாயம் கூடும்.
கன்னி – சொத்துப் பிரச்னையில் தீர்வு கிடைக்கும். நீங்கள் ஈடுபடும் செயல்கள் இலாபமாகும். உங்கள் சுயஆற்றல் இன்று வெளிப்படும். துணிச்சலாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.
துலாம் – இரண்டு நாளாக இருந்த சங்கடங்கள் விலகும். எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
விருச்சிகம் – மனதில் தேவையற்ற சிந்தனை உண்டாகும். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். சிலர் உங்களைக் குறை சொல்வார்கள். அதற்கு பதில் சொல்ல வேண்டாம்.
தனுசு – வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு தாமதமாகும். எதிர்கால நலனை கருதி புதிய முயற்சி மேற்கொள்வீர்கள். விரயம் அதிகரிக்கும்.
மகரம் – எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். சந்திக்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். உங்கள் செயல்களை பிறர் பாராட்டுவார்கள். புதிய பொறுப்பு உங்களை வந்து சேரும்.
கும்பம் – பொதுநலனில் கவனம் செல்லும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு அதிகரிக்கும்.கூட்டு வியாபாரத்தில் ஆதாயம் வரும். நண்பர்களுடன் புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
மீனம் – இரண்டு நாளாக இருந்த நெருக்கடி விலகும். மனதில் நிம்மதி உண்டாகும். பணியிடத்தில் இருந்த சங்கடம் விலகும். எண்ணம் நிறைவேறும். நிதிநிலை உயரும்.
