யாழ்.மாநகரசபையின் வரவு – செலவுத்திட்டம் 8 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
வரவு – செலவுத் திட்டம் இன்று (21) காலை யாழ்.மாநகர சபை முதல்வரால் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்போது வரவு – செலவுத்திட்டத்திற்கு முதல்வர் மணிவண்ணன் ஆதரவு அணியின் 10 பேர் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் ஒருவர் உட்பட 11 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.
தமிழ்தேசியக் கூட்டமைப்பின் 15 உறுப்பினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 2 உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு உறுப்பினர் உட்பட 18 உறுப்பினர்கள் வரவு – செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.
யாழ்.மாநகரசபையின் முதல்வராக வி.மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டமைக்கு ஆதரவு வழங்கிய ஈ.பி.டி.பி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது வெளிநடப்பு செய்தது.
