திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து இன்று(21) மாலை 6.15 அளவில் கிளிநொச்சி பளையில் கோர விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில், மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன 15க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு பேருந்துகள் வேகமாக ஓடி வந்த நிலையில், குறித்த பேருந்து கல்லுடன் மோதியே கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
