கிளிநொச்சி இந்துக்கல்லூரியின் மாணவர்களால் ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்யக்கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலை செயற்பாட்டுக்கு இடையூறாக உள்ள குறித்த ஆசிரியரை மாற்றக் கோரி பாடசாலை சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டம் நேற்று (20) காலை பிரதான வாயிலை மூடி இடம்பெற்றது. இதன்போது உள்ளே செல்ல விடாது மாணவர்கள் பிரதான வாயிலை மறித்து போராட்டதில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து குறித்த இடத்திற்கு பொலிசார் வருகை தந்து குறித்த ஆசிரியரை பாதுகாப்பாக அழைத்து சென்று வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
பாடசாலை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுதுதல் முறையற்ற விடயங்களில் ஈடுபடுதல் என குறித்த ஆசிரியர் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.
தொடர்ந்து, கிளிநொச்சி தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் அமல்ராஜ் வருகை தந்து அவரை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பாடசாலை நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுக்குமாறும் பணித்தார்.
இந்த நிலையில் மீண்டும் எதிர்ப்பு எழுத்த நிலையில், பாடசாலை முதல்வர் பிரதான வாயிலை திறந்து மாணவர்களை உள்ளே செல்லுமாறு பணித்தார். அமைதியாக மாணவர்கள் உள்ளே சென்றனர்.
