குடும்பத் தகராறு காரணமாக தனது வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்திய இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவம் மஸ்கெலியா, நல்லதண்ணி போலீஸ் பிரிவுக்குட்பட்ட லஷ்சபான தோட்டத்தில் வாழமலை பிரிவில் இடம்பெற்றுள்ளது. 33 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையே தவறான முடிவெடுத்து தன்னைத்தானே கத்தியால் குத்தியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர்.
