அனுராதபுரம் – பூஜா நகரில் காட்டு யானை தாக்கியதில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவனே உயிரிழந்துள்ளார்.
திசா குளம், நீரவிய, தேவனம்பியதிஸ்ஸபுர நான்காம் படி பகுதியில் வசிக்கும், 17 வயதுடைய எம். ரஷிம் முகமது ரஷீத் என்ற மாணவரே உயிரிழந்துள்ளார்.
நெல் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் உறவினர் ஒருவரை இன்று அதிகாலை 4.45 மணியளவில் பஸ்ஸில் ஏற்றி விட்டு, மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போதே, காட்டு யானை தாக்கி மாணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
