முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் நோயாளர் காவு வண்டி மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறுநீரக நோயாளி ஒருவரை மல்லாவி வைத்தியசாலையில் இருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நோயாளர் காவு வண்டி மோட்டார் சைக்கிளில் சென்றவரை மோதியது.
விபத்தில் காயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி கனகாம்பிகை குளத்தைச் சேர்ந்த கந்தசாமி சுப்பிரமணியம் என்பவரே உயிரிழந்துள்ளார்.
