இந்தியாவின் வடக்குப் பகுதியில், இந்திய – சீன எல்லைக்கு அருகே சிக்கிம் மாநிலத்தில் இராணுவ வாகனம் விபத்துக்கு உள்ளானது.
சாட்டன் என்ற பகுதியிலிருந்து 3 இராணுவ வாகனம், தாங்கு என்ற பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது ஜெமா என்ற பகுதியில் உள்ள வளைவு பாதையில் செல்லும்போது ஒரு வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் 16 இராணுவ வீரர்கள் பலியாகினர். மேலும் படுகாயமடைந்த வீரர்கள் 4 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
