அன்பும் பண்பும்
அகத்தினில் கொண்டு
எண்ணத்தை இனிமையாக்கி
எமை வளர்த்த தந்தையே
இன்முகம் காட்டி
இன் சொல் பேசி
இதமாக எமக்கு
இனியவை புகட்டினீர்கள்…
நீங்கள் இல்லாத
எமது உலகம்
இருண்டு கிடக்கிறது
எப்படி நாம் ஆறுதலடைய….
கடமை போதுமென்று
காலன் அழைத்தானோ..
நீங்கள் மறைத்து
மாதம் ஒன்று மறைந்ததோ…
ஆண்டுகள் போனாலும்
ஆறாது உங்கள் நினைவுகள்…
எமதன்புத் தெய்வமே,
எந்நாளும் உங்கள் நினைவோடு
எங்கள் காலங்கள் கழிந்திடும்…
உங்கள் ஆத்மா சாந்திக்காய்
எப்போதும் பிரார்த்திக்கிறோம்…
குடும்பத்தினர்
