முல்லைத்தீவு – முள்ளியவளை – நீராவியடிப் பகுதியில், சிறு வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 22ஆம் திகதி குறித்த நபர் அவருடைய கடைக்குள் சடலமாக காணப்பட்டுள்ளார். 68 வயதுடைய அமிர்தலிங்கம் தனபாலசிங்கம் என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் மேற்க்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கோண்டு வருகின்றனர்.
