புத்தளம் பாலாவி பகுதியில் வீடொன்றில் மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
சமைத்துக்கொண்டிருந்த வேளை வெளிச்சம் போதாமையினால் மின் குமிழை பொருத்துவதற்கு முற்பட்ட வேளையிலே மின்சாரம் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த, சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. புத்தளம் தில்லையடி பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாராணைகளைப் புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
