சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற 23 வயதுடைய இளைஞன் ஒருவர் திடீர் சுகயீனம் ஏற்பட்ட நிலையில், இன்று (25) உயிரிழந்துள்ளார்.
கந்தகெட்டிய பிரதேசத்தில் இருந்து சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற குழுவுடன் இணைந்து இந்த இளைஞன், சிவனொளிபாத மலையில் ஏறிக்கொண்டிருந்த போது, இன்று அதிகாலை திடீரென சுகவீனமுற்ற நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
