மேடம் – உங்கள் முயற்சி வெற்றியாகும்.மற்றவர்களால் செய்ய முடியாத ஒரு செயலை செய்து முடிப்பீர்கள். தொழிலில் ஏற்பட்ட தடைகளை சரிசெய்வீர்கள். வருவாய் அதிகரிக்கும்.
இடபம் – நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். குடும்பத்தில் உண்டான பிரச்சினைகளை சரி செய்வீர்கள். புதிய முயற்சி எளிதாக நிறைவேறும்.
மிதுனம் – செயல்களில் விழிப்புணர்வு வேண்டும். சந்திராஷ்டமத்தின் காரணமாக சில சங்கடங்கள் உண்டாகும்.
எதிர்பார்த்த ஒன்று இழுபறியாகும். முயற்சி நிறைவேறாமல் போகும். வார்த்தைகளில் கவனம் அவசியம்.
கடகம் – தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர்கள். ஒரு சிலர் வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி காண்பீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்புடன் உங்கள் முயற்சி ஒன்று வெற்றியாகும்.
சிம்மம் – வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பகைவர்கள் உங்களை விட்டு விலகிச்செல்வார்கள். எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். இழுபறியான விவகாரம் உங்களுக்கு சாதகமாகும்.
கன்னி – எதிர்பார்த்த வரவு வந்து சேரும். குடும்பத்திற்காக சேமிப்பை ஏற்படுத்துவீர்கள். வியாபாரத்தில் உங்கள் அனுகுமுறையால் இலாபம் அதிகரிக்கும். கடன்களை அடைப்பீர்கள்.
துலாம் – அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு ஒன்றில் பின்னடைவு உண்டாகும். தாயாரின் உடல் நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையாகும். அக்கம் பக்கத்தினரால் சில சிக்கல்கள் உண்டாகும்.
விருச்சிகம் – வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாள்வீர்கள். உங்கள் முயற்சி வெற்றியாகும்.
சொத்து வழியிலான சங்கடங்கள் விலகும். நீங்கள் எதிர்பார்த்த நன்மைகளை அடைவீர்கள்.
தனுசு – நேற்றுவரை இழுபறியாக இருந்த ஒரு செயல் இன்று நிறைவேறும். குடும்பத்தில் உங்கள் செயலை மற்றவர்கள் பாராட்டுவர். நினைத்ததை அடைவீர்கள்.
மகரம் – வேலை பளு அதிகரிக்கும். அலைச்சல் உண்டாகும். செயல்களில் கவனம் அவசியம். மற்றவர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள்.
கும்பம் – புதிய முயற்சிகள் இன்று வேண்டாம். வழக்கமான செயல்களும் இழுபறியாகும். அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் காண முடியாது. வரவு செலவில் கவனம் தேவை.
மீனம் – மற்றவர் விரும்பும் வகையில் உங்கள் செயல்பாடுகள் இருக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். நீங்கள் நினைத்தவை நடந்தேறும். வருமானம் அதிகரிக்கும்.
