கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம்களை புறக்கணித்து முன்னெடுக்கப்படும் எந்தத் தீர்மானத்தையும் நாம் ஏற்க மாட்டோம் – என்று கிழக்கு மாகாணத்தின் பள்ளிவாசல்கள் அனைத்தும் ஒன்றுகூடி அமைத்துள்ள கிழக்கு மாகாண பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அம்பாறை மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளன கேட்போர் கூடத்தில் இந்தக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில், இனப்பிரச்னைக்கான தீர்வு பேச்சில் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் உள்ள முஸ்லிம் சிவில் பிரதிநிதிகள் உள்ளடக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஒருதலைப்பட்சமாகப் பேச்சுகள் நடைபெற்றால் அதை நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், குறிப்பிட்ட காலத்துக்குள் முஸ்லிம் மக்களுக்கான தீர்வுத் திட்ட யோசனைகள் அரசிடம் முன்வைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் கிழக்கு மாகாண சம்மேளனத்தின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
