சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குளி 300 வீட்டத் திட்டப் பகுதியில் 23 வயது மதிக்கத்தக்க இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.
கழுத்துப் பகுதியில் வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞன் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த இளைஞன் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வீட்டினுள் உள்நுழைந்து தகாத முறையில் அத்துமீறி நடக்க முற்பட்ட நிலையில், வாள் வெட்டுத்தாக்குதல் மேற்க்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
