சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குளி 300 வீட்டத் திட்டப் பகுதிதியில் 23 வயது மதிக்கத்தக்க இளைஞன் மீது வாள்வெட்டுச் சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.
கழுத்துப் பகுதியில் வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞன் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாள்வெட்டுத்தாக்குதலை மேற்க்கொண்டவர்கள் இனங்காணப்படாத நிலையில், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
