மேடம் – புதிய முயற்சி ஒன்றில் இலாபம் காண்பீர்கள். நீண்ட நாள் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையை கையாளுவீர்கள். வருவாய் அதிகரிக்கும். நிதி நிலை உயரும்.
இடபம் – வியாபாரத்தை விரிவு செய்ய திட்டமிடுவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு நலம் தரும். தடைபட்ட செயல்களை இன்று மீண்டும் தொடர்வீர்கள். உங்கள் முயற்சி வெற்றியாகும்.
மிதுனம் – இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடிகள் விலகும். உங்கள் முயற்சி இலபமாகும்.
எதிர்பார்த்த செய்தி வீடு தேடி வரும். பிரச்னை ஒன்று தீரும். செல்வாக்கு உயரும்.
கடகம் – சந்திராஷ்டமம் என்பதால் செயல்களில் கவனமும் அமைதியும் தேவை. புதிய முயற்சிகள் வேண்டாம்.
மற்றவரை நம்பி செய்யும் செயல் இழுபறியாகும். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.
சிம்மம் – திட்டமிட்ட செயல்களை நண்பர்கள் ஒத்துழைப்புடன் செய்து முடிப்பீர்கள். உங்கள் விருப்பம் நிறைவேறும்.
தம்பதிகளுக்குள் இருந்த சங்கடம் தீரும். ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வீர்கள்.
கன்னி – உயர்ந்த இடத்தில் இருப்பவர்களை சந்திப்பீர்கள். உங்கள் முயற்சி ஒன்று இலாபமாகும். புதிய தொழில் தொடங்க பணம் திரட்டும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பர்.
துலாம் – பூர்வீக சொத்து பிரச்னை மீண்டும் தோன்றும். பேச்சில் நிதானம் அவசியம்.
முயற்சியில் முழுமையாக ஈடுபட்டாலும் முடிவு உங்களுக்கு எதிர்மறையாகும். கவனமுடன் செயல்படுங்கள்.
விருச்சிகம் – எதிர்பார்ப்பு ஒன்று தள்ளிப்போகும். குடும்பத்தில் சலசலப்பு ஏற்பட்டு மறையும்.
உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். நண்பர்களால் அனுகூலம் காண்பீர்கள்.
தனுசு – நீங்கள் எண்ணிய செயலை துணிச்சலுடன் செயல்பட்டு செய்து முடிப்பீர்கள்.
பணியாளர்களின் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். நிதி நிலை உயரும்.
மகரம் – உறவினர் ஆதரவுடன் நீண்ட நாள் பிரச்னை ஒன்றுக்கு தீர்வு காண்பீர்கள். கேட்ட இடத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.
கும்பம் – வேலையின் காரணமாக சலிப்பு உண்டாகும். செயல்களில் குழப்பம் ஏற்படும்.
மற்றவர்கள் உங்களை அலட்சியம் செய்வதாக நினைத்து வருந்துவீர்கள். அலைச்சல் அதிகரிக்கும்.
மீனம் – அலைச்சல் அதிகரிக்கும். எடுத்த வேலையை முடிக்க முடியாமல் சங்கடப்படுவீர்கள்.
பணியிடத்தில் சில பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும். செயல்களில் கவனம் தேவை.
