ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 18 கிராம் ஐஸ் போதைப் பொருள், 1000 மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
ஆனைக்கோட்டை மற்றும் கொக்குவில் பகுதிகளைச் சேர்ந்த 24 மற்றும் 25 வயதுடைய இரு இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
