யாழ்.மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலர்களுக்கும் ஒரு மேலதிக மாவட்ட செயலருக்கும் இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவ்வகையில், மேலதிக யாழ். மாவட்ட செயலர் (காணி) எஸ். முரளிதரன், ஊர்காவற்துறை பிரதேச செயலர் மஞ்சுளாதேவி சதீசன் , நல்லூர் பிரதேச செயலர் அன்ரன் எழிலரசி , தெல்லிப்பளை பிரதேச செயலர் சண்முகராஜா சிவசிறி , சங்கானை பிரதேச செயலர் பொன்னம்பலம் பிறேமினி மற்றும் யாழ்ப்பாண பிரதேச செயலர் சாம்பசிவம் சுதர்சன் ஆகியோருக்கே இடம்மாற்றம் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆயினும், இடமாற்றம் குறித்து பிரதேச செயலர்களுக்கு உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
