மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் சாறி சிக்கி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கிறிஸ்மஸ் தினத்தன்று தேவாலயத்திற்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், கோப்பாய் பகுதியில் மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் சாறி சிக்குண்டதால் தூக்கி வீசப்பட்டனர்.
இவ்விபத்தில் படுகாயமடைந்த தாயும், மகளும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
60 வயதுடைய சோதிலிங்கம் நாகேஸ்வரி என்பவரே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
