அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் குளர்காலத்தில் பனிபுயல் வீசுவது வழக்கம். பனிப்பொழிவு காரணமாக நியூயார்க் நகர வீதிகள் அனைத்தும் பனி மூடிக்கிடக்கிறது.
குறைந்தபட்சம் சுமார் 25 சென்ரி மீற்றர் உயரத்திற்கு சாலைகளை பனி மூடிக்கிடப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களும் பனியால் மூடப்பட்டு நகரமே வெண்பனி மூட்டமாக காணப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக அமெரிக்காவின் பல மாகாணங்களிலும் கடுமையான பனிபுயல் வீசியது. மேலும் பனி புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றது.
பனிபுயலில் சிக்கி இதுவரை பொதுமக்கள், பெண்கள் உள்பட 60 பேர் பலியாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 50 ஆண்டுகளில் இதுபோன்ற பனிபுயல் வீசியதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பனிபுயல் காரணமாக அமெரிக்காவில் விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
