கிளிநொச்சியில் நீர்க்கால்வாயிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் பொலிஸரால் நேற்று (27) மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி – கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதியில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நீர்க்கால்வாயினுள், சடலம் இருப்பதாக கிராமசேவையாளர் மற்றும் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் துரித விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
