நேபாள நாட்டில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பாக்லுங் மாவட்டத்தில் நள்ளிரவு ஒரு மணி முதல் 2 மணிக்குள் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சௌர் பகுதியில் முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 4.7 ரிக்டர் அளவிலும், குங்கா பகுதியில் 2வதாக ஏற்பட்ட நிலநடுக்கம் 5.3 ரிக்டர் அளவிலும் பதிவானது. இரண்டு முறை பதிவான நிலநடுக்கங்களால் உயிர் சேதமோ, வீடுகள், கட்டிடங்கள் குறித்த சேதமோ குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.
