அநுராதபுரம் – தம்புத்தேகம கொன்வெவ பிரதேசத்தில் நேற்று (27) இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
லொறியும், முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டியில் பயணித்த நால்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 21 வயது மற்றும் 29 வயதுடைய இருவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் பயணித்த லொறியே இவ்விபத்தில் சிக்கியுள்ளது.
