சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. இந்த விழாவுக்காக கடந்த மாதம் 16 ஆம் திகதி நடை திறக்கப்பட்டது.
கடந்த 27 ஆம் திகதி வரை 41 நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு வந்தனர். இந்த நாட்களில் சுமார் 30 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு சுகாதார மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
சபரிமலை சென்ற பக்தர்கள் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் இந்த சுகாதார மையங்களில் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் இதய நோய் பாதிப்புக்கு மட்டும் 18 ஆயிரத்து 888 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
மேலும், மாரடைப்பு காரணமாக 24 பேர் மரணம் அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
