சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட உலர் உணவுப்பொருட்கள் இன்று (29) யாழ்.மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் முன்னெடுக்கும் குறித்த நிகழ்வில், இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதர் ஹுவெய் கலந்து கொண்டு மக்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்.
யாழ்.மாவட்டதில் 1320 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம், சுன்னாகம் பிரதேச செயலகங்களைச் சேர்ந்த 100 பேருக்கு முதற்கட்டமாக வழங்கி வைக்கப்பட்டது.
இவ்நிகழ்வில், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், வடமாகாண பிரதம செயலாளர் எஸ்.எம்.பந்துளசேன, யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
