சீனாவின் உதவி தூதுவர் ஹூ வெய் தலைமையிலான குழுவினர் நேற்று (28) யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தனர். இவ்வாறு வந்தவர்களில் ஓர் அதிகாரி தமிழர் பாரம்பரிய உடையை அணிந்து வருகை தந்தார்.
இந்த வருடத்தின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் வந்த சீனத் தூதுவர் கியூ சென்ஹொங் தலைமையிலான குழுவினர் நல்லூர் ஆலயத்துக்கு பட்டு வேட்டி அணிந்து சென்றிருந்தனர். இது தமிழ் மக்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
