அதிகளவான ஹெரோயின் போதைப் பொருளை பாவித்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவத்தில் திருநெல்வேலி – தலங்காவல் பிள்ளையார் கோயிலடியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலத்தில் ஹெரோயினால் ஏற்பட்ட 15ஆவது மரணமாக இது பதிவாகியுள்ளது.
யாழ். போதனா மருத்துவமனையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையில் அதிகளவு ஹெரோயினை உள்ளீர்த்ததே மரணத்துக்குக் காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
