மேடம் – உங்கள் விருப்பங்கள் இன்று நிறைவேறும். நேற்றுவரை இருந்த சங்கடங்கள் விலகும். சூழ்நிலைகளை புரிந்து கொண்டு சிந்தித்து செயல்படுவீர்கள் உங்கள் முயற்சி ஒன்று வெற்றியாகும்.
இடபம் – இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் உங்கள் மன நிலையில் பதட்டம் ஏற்படும். விழிப்புடன் செயல்பட வேண்டும். எதிர்பார்ப்புகள் தள்ளிப் போகும். செயல்களில் பின்னடைவு உண்டாகும். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம்.
மிதுனம் – நண்பர்கள் உதவியுடன் நீங்கள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதிகளுக்குள் ஏற்பட்ட சல சலப்புகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கடகம் – முயற்சி ஒன்றில் போராடி வெற்றி பெறுவீர்கள். உங்கள் திறமை வெளிப்படும் நாள். பழைய பிரச்சினை ஒன்றில் முடிவு காண்பீர்கள். மறைமுக எதிரிகள் விலகிச்செல்வார்கள்.
சிம்மம் – குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உங்கள் நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர் யார் பகைவர் யார் என்பதைப் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள்.
கன்னி – தடைகளைத் தாண்டி உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். ஆலய தரிசனம் மேற்கொள்வீர்கள். நீங்கள் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். முன்னோர் வழிபாடு நன்மை தரும்.
துலாம் – உங்கள் முயற்சியில் இருந்த தடைகள் விலகும். துணிச்சலுடன் செயல்பட்டு லாபமடைவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளை குடும்பத்தினர் ஆதரவுடன் சரி செய்வீர்கள்.
விருச்சிகம் – எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி வந்து சேரும். நண்பர்களால் ஒரு முயற்சி நிறைவேறும். தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சினைகள் விலகும். புதிய முயற்சி ஒன்று நிறைவேறும்.
தனுசு – மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும். முயற்சியில் தடுமாற்றம் ஏற்படும். எதிர்ப்புகளை சமாளித்து உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர்கள். செயல்களில் கவனம் தேவை.
மகரம் – மறைமுக எதிர்ப்புகள் தோன்றினாலும் அவற்றை சமாளித்து நினைத்ததை சாதிப்பீர்கள். தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து செல்வதால் குடும்பத்தில் நன்மை அதிகரிக்கும்.
கும்பம் – திட்டமிட்ட வேலைகளை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத வரவு வந்து சேரும். வியாபாரத்தில் உங்கள் முயற்சி வெற்றியாகும். பழைய கடன்களை அடைப்பீர்கள்.
மீனம் – சுறு சுறுப்பாக செயல்பட்டு கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். காணாமல் போன ஒரு பொருள் இன்று கிடைக்கும். புதிய நம்பிக்கை உண்டாகும்.
